search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில் தாக்கம்"

    வெயிலின் தாக்கத்தால் நெல்லிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் விருதலைப்பட்டி, குட்டம், சுக்காம்பட்டி, ரங்கநாதபுரம், கருக்காம் பட்டி, கோடாங்கிபட்டி, சாலையூர் 4 ரோடு, எரியோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்லிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மழை இல்லாததாலும் கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் நெல்லிக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் ரூ.40 முதல் ரூ.60 வரை கிலோவுக்கு விலை உயர்ந்துள்ளது.

    விலை உயர்வு மகிழ்ச்சி அளித்தாலும் மழை குறைந்ததால் ஏக்கருக்கு 200 கிலோ நெல்லிக்காய் எடுத்தாலும் பெரிதாக சேதம் ஏற்பட வில்லை என்பதும் நெல்லிக்காய்கள் வெயிலில் வெம்பி போவதால் சேதம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவ குணம் கொண்ட பெரிய நெல்லிக்காய்கள் பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகளால் வாங்கி செல்லப்படும்.

    ஆனால் தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

    இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங்கிளாஸ் அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் இந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 
    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வெயில் வாட்டி வதைத்தது. உடலில் நெருப்பை அள்ளி போட்டதை போல வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.

    இதைபோல் இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்விசிறியை பயன்படுத்தினால் அனல் காற்றாக வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பலர் குடை பிடித்தபடியும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் துப்பட்டாவில் தலை மற்றும் முகத்தை மூடியபடியும் சென்றனர்.

    பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை, இளநீர் கடை, மோர் கடை, கம்பங்கூழ், கேழ்வரகு கடை, சர்பத் கடை போன்ற கடைகளை நாடி வருகின்றனர்.

    இதனால் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது.

    நுங்குகள், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலை ஓரமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-பெங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலையோரமாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.
    மணமேல்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி அடைந்தனர். இதனால் மணமேல்குடி பகுதியில் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோக நடந்து வந்தது. மேலும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி, காரக்கோட்டை, தினையாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இந்தநிலையில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழையால் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய ஏற்றதாக இருந்தது. மேலும் இந்த பலத்த மழையால் அதிகாலையில் மீன்பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு பின்வருமாறு:- 

    மீமிசல்-1.20, ஆவுடையார்கோவில்-8.20, மணமேல்குடி-45, கட்டுமாவடி-12. 
    ×